கேரளாவில் ஸ்வப்னாவுக்கு அரசுப் பணி வழங்க ஒப்புதல்; குற்றப்பத்திரிகையில் பினராயி விஜயன் பெயர்: தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வருக்கு சிக்கல்

By செய்திப்பிரிவு

கேரளாவில் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்த தங்கக் கடத்தல் வழக்கில் அமலாக்கத் துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ஸ்வப்னா சுரேஷ் நியமனத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒப்புதல் அளித்தார் என கூறப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் கேரள அரசின் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:

வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கடந்த 2019 நவம்பரில் கேரள அரசின் ‘ஸ்பேஸ் பார்க்’ திட்டத்தில் சேர்ந்துள்ளார். தனது நியமனம் பற்றி கேரள முதல்வருக்குத் தெரியும் என ஸ்வப்னா கூறியுள்ளார். முதல்வரின் முதன்மைச் செயலர் சிவசங்கரை அலுவல்ரீதியாக ஸ்வப்னா 8 முறை சந்தித்துள்ளார். அலுவல்ரீதியாக அல்லாமல் பல முறை சந்தித்துள்ளார். முதல்வர் உடனிருக்கும் போதும் சிவசங்கரை ஸ்வப்னா சந்தித்துள்ளார். இதற்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரக ஊழியராக ஸ்வப்னாவை முதல்வர் அறிவார்.

‘ஸ்பேஸ் பார்க்’ நியமனத்தின் போது, முதல்வரிடம் பேசி நியமனத்தை உறுதி செய்வதாக ஸ்வப்னாவிடம் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். ஸ்பேஸ் பார்க்கில் 2 அதிகாரிகளை சந்தித்து தனது பொறுப்புகளை தெரிந்து கொள்ளும்படி ஸ்வப்னாவிடம் சிவசங்கர் கூறியுள்ளார். இதையடுத்து பணியில் சேரும்படி ஸ்வப்னாவுக்கு அழைப்பு வந்துள்ளது.

நிரந்தர வைப்புத் தொகையாக ஸ்வப்னா ரூ.35 லட்சம் டெபாசிட் செய்ய உதவும்படி பட்டய கணக்காளர் வேணுகோபாலிடம் சிவசங்கர் கேட்டுக்கொண்டார். ஆனால் அத்தொகையை பாதுகாக்க, ஸ்வப்னாவுடன் சேர்ந்து கூட்டு வங்கி லாக்கரை வேணுகோபால் தொடங்கியுள்ளார்.

நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சிவசங்கர் – வேணுகோபால் இடையிலான வாட்ஸ் உரையாடல் ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக சிவசங்கர் பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கில் சிவசங்கரின் பங்கு குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

12 mins ago

உலகம்

35 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

54 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்