10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை: 3-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

By செய்திப்பிரிவு

10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலையான அடல் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி 3-ம் தேதி திறந்து வைக்கிறார்.

உலகில் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையாக இது இருக்கிறது. 9.02 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்க நெடுஞ்சாலை, மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைப்பதாக, ஆண்டு முழுக்க போக்குவரத்து நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டதாக இருக்கிறது. முன்னர் கடும் பனிப்பொழிவு இருக்கும் போது ஆண்டுதோறும் சுமார் 6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்தது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர்கள் (10,000 அடி) உயரத்தில், இமயமலையில் பிர் பஞ்சால் பகுதியில் அதிநவீன வரையறைகளுக்கு ஏற்ப இந்தச் சுரங்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மணாலி மற்றும் லே இடையிலான சாலைப் பயண தூரத்தை 46 கிலோ மீட்டர் அளவுக்குக் குறைப்பதாகவும், பயண நேரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை குறைப்பதாகவும் இது இருக்கும்.

அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனைப் பகுதி, 3060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனையம் பகுதி 3071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸு, டெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது.

குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாக, இரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில், வாகனங்கள் செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5.525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இதில் செல்லலாம்.

இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காத, அவசர கால சுரங்கம், பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது.

தினமும் 3000 கார்கள் மற்றும் 1500 லாரிகள் செல்லும் வகையில் அதிகபட்சம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது.

அதிநவீன எலெக்ட்ரோ மெக்கானிக்கல் நடைமுறைகளைக் கொண்டதாக, காற்றோட்ட வசதி கொண்டதாக, SCADA கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்பு அம்சங்கள் கொண்டதாக, வெளிச்சம் கொண்ட, கண்காணிப்பு முறைமைகள் கொண்டதாக இந்தப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதையில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில:

a. இரு முனையங்களிலும் சுரங்கத்தில் நுழையும் இடத்தில் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள்.

b. அவசர கால தகவல் தொடர்புக்கு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி இணைப்புகள்

c. 60 மீட்டர்களுக்கு ஒரு இடத்தில் தீயணைப்பு குழாய் வசதிகள்

d. 250 மீட்டர் இடைவெளியில் சிசிடிவி பொருத்தி, ஏதும் நிகழ்வுகளை தானாகவே கண்டறியும் வசதி.

e. 1 கிலோ மீட்டர் இடைவெளியில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் வசதி

f. வெளிச்சம் ஏற்படுத்துதல் / பயண வழிகாட்டி பலகைகள் 25 மீட்டர் இடைவெளியில் அமைக்கப் பட்டுள்ளன.

g. சுரங்கப் பாதை முழுக்க வழிகாட்டும் தகவல் அறிவிப்பு வசதி.

h. 50 மீட்டருக்கு ஒரு இடத்தில் தீ பிடிக்காத தரம் கொண்ட காற்று சீர் செய்யும் சாதனங்கள்

i. 60 மீட்டர் இடைவெளியில் கேமராக்கள்.

ரோட்டங் கணவாய்க்கும் கீழே முக்கியமான இந்த சுரங்கப் பாதையை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவமான முடிவு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2000 ஜூன் 03 -ம் தேதி எடுக்கப்பட்டது. தெற்கு முனையத்தை இணைப்பதற்கான சாலைக்கு 2002 மே 26 -ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

பெரிய புவியியல், மலைப்பரப்பு மற்றும் வானிலை சவால்களை முறியடிக்கும் பணியில் எல்லைப் பகுதி சாலைகள் அமைப்பு நிறுவனம் (பி.ஆர்.ஓ.) தொடர்ந்து மேற்கொண்டது. மிகவும் கடுமையான 587 மீட்டர் நீளம் கொண்ட செரி நளா பால்ட் பகுதி சாலையும் இதில் அடங்கும். இரு முனையங்களில் இருந்தும் இணைப்பு வசதி 2017 அக்டோபர் 15-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது.

2019 டிசம்பர் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், ரோட்டங் சுரங்கப் பாதைக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி 2020 அக்டோபர் 3-ம் தேதி காலை 10 மணிக்கு ரோட்டங்கில் அடல் சுரங்கப்பாதையைத் திறந்து வைக்கிறார்.

மணாலியில் தெற்கு முனையத்தில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி லாஹாவ் ஸ்பிட்டி மற்றும் சோலாங் பள்ளத்தாக்கில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 mins ago

இந்தியா

7 mins ago

சுற்றுலா

31 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்