நாளை காந்தி ஜெயந்தி; தூய்மை இந்தியா திட்டம் 6-வது கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினமான நாளை, தூய்மை இந்தியா திட்டத்தின் 6வது ஆண்டு விழாவை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்,கொண்டாடுகிறது.

இதை முன்னிட்டு 6 ஆண்டுகள் தூய்மை, ஒப்பிடமுடியாதது என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமை தாங்குகிறார்.

தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் புதுமையான நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்காக இணையதளத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைக்கிறார்.

கோவிட் 19 நோக்கிய இந்திய நகரங்களின் செயல்பாடு பற்றி ஆவணம், துப்புரவு தொலைநோக்கு ஆகியவை வெளியிடப்படவுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மாநிலங்கள்/நகரங்கள் தங்கள் அனுபவம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கூறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 4,327 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

66 லட்சம் வீடுகளில் கழிவறைகள் மற்றும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சமுதாய கழிவறைகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை 1,319 நகரங்களுக்கு திறந்தவெளி கழிப்பிடம் இல்லா + சான்றிதழ் மற்றும் 489 நகரங்களுக்கு திறந்தவெளி கழிப்பிடம் இல்லா ++ சான்ழிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன.

2,900க்கும் மேற்பட்ட நகரங்களில் கட்டப்பட்ட 59,900 கழிவறைகள் கூகுள் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன. 97% வார்டுகளில் வீட்டுக்கு சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தூய்மை கணக்கெடுப்பு பணியில் 12 கோடிப் பேர் பங்கேற்றுள்ளனர். துப்பரவு பணியாளர்கள் அனைவருக்கும், கண்ணியமான வாழ்வாதாரம் அளிக்கப்பட்டுள்ளது.

முறைசாரா குப்பை சேகரிப்போர் 84,000 பேர் பிரதான வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். துப்புரவு பணியாளர்கள் 5.5 லட்சம் பேர் பல்வேறு நலத்திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.

திறன் மேம்பாடுக்காக 150க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் நடத்தப்பட்டன. இவற்றில், 3,200க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்