சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கியதாக புகார்: தெலங்கானா மாநிலத்தில் சிறப்பு இணை ஆட்சியர் கைது

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக 10 ஏக்கர் அரசு நிலத்தை சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வழங்கியது தொடர்பாக சிறப்பு இணை மாவட்ட ஆட்சியரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஹைதராபாத் மாவட்ட சிறப்பு இணை மாவட்ட ஆட்சியராக பணி யாற்றி வருபவர் ராமசந்திரய்யா. இவர், சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவரின் விண்ணப்பத்தை ஏற்று அவருக்கு ஹயத்நகர் மண்டலம் துர்காயாஞ்சல் பகுதியில் (சர்வே எண் 52) உள்ள 10 ஏக்கர் அரசு நிலத்தை வழங்கி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், வனஸ்தலிபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

நிலச்சட்டத்துக்குப் புறம்பாக ராமசந்திரய்யா, சுதந்திர போராட்ட தியாகிக்கு 10 ஏக்கர் அரசு நிலத்தை வழங்கி உள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் நேற்று ராமசந்திரய்யாவை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்