பிஹாரில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

பிஹார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்(எய்ம்ஸ்) அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமரின் ‘ஸ்வஸ்த்யா சுரக்‌ஷா’ திட்டத்தின் கீழ் இது நிறுவப்படவுள்ளது. இந்த எய்ம்ஸ் மையத்துக்கு ரூ.2,37,500/- மாத சம்பளத்தில் இயக்குனர் பதவியை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.1264 கோடி செலவில் கட்டப்படும் இந்த எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி கழகம், மத்திய அரசு ஒப்புதல் அளித்த தேதியிலிருந்து 4 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

* புதிய எய்ம்ஸில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 60 பி.எஸ்.சி(நர்சிங்) இடங்கள் இருக்கும்.

* 15-20 பல்நோக்கு மருத்துவ துறைகள் இருக்கும்.

* 750 படுக்கை வசதிகள் இருக்கும்

* ஒரு நாளைக்கு வெளி நோயாளிகள் 2 ஆயிரம் பேரும், உள் நோயாளிகள் மாதத்துக்கு 1000 பேரும் சிகிச்சை பெறலாம்.

* முதுநிலை மருத்துவ படிப்புகளும் தொடங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்