பிரேதப் பரிசோதனையில் கிட்னி திருட்டு?- மும்பையில் குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டு; இறந்தவரின் உடலை மாற்றிக் கொடுத்த மருத்துவமனை 

By பிடிஐ

மும்பையில் மாநகராட்சி மருத்துவமனை ஒன்றில் இறந்து போன 28 வயது வாலிபர் உடலை அவரது குடும்பத்திடம் ஒப்படைக்காமல் வேறொரு குடும்பத்திடம் ஒப்படைத்தது பெரிய சர்ச்சையாகியுள்ளது.

அதோடு இவரது பிரேதப் பரிசோதனையின் போது கிட்னி திருடப்பட்டதாக இறந்த நபரின் குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது, பிரேதப் பரிசோதனை மீதான சந்தேகத்தை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்டனர்.

ஞாயிறன்று லோகமான்ய திலக் முனிசிபல் பொது மருத்துவமனையில்தான் இந்தப் பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனையடுத்து பிணவறையில் பணியாற்றிய 2 பேரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்பை கார்ப்பரேஷன் கூறும்போது, “பிரேதத்தை மாற்றி ஒப்படைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிட்னி திருட்டு குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது” என்று கூறியுள்ளது.

ஞாயிறன்று நடந்த இந்தச் சம்பவத்தில், சாலை விபத்தில் இறந்து போன 28 வயது நபர் அங்குஷ் சர்வடேயின் உடலை இன்னொரு குடும்பத்திடம் ஒப்படைத்தனர், அந்தக் குடும்பத்தின் ஹேமந்த் திகம்பர் என்பவர் தற்கொலை செய்து கொண்டவர், திகம்பரின் உடலை அவர்களிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக சாலை விபத்தில் பலியான அங்குஷ் சர்வடே உடலை திகம்பர் குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து சர்வடேயின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையிலேயே போராட்டம் நடத்தினர். மருத்துவமனையின் தகவல்களீன் படி ஆகஸ்ட் 28ம் தேதி விபத்தில் சிக்கிய சர்வடே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். உயிர்காப்பு கருவிகளுடன் இவர் சிகிச்சை பெற்று வந்தார். அறுவை சிகிச்சை நடத்தியும் அவர் பிழைக்கவில்லை.

மற்றொரு நபர் திகம்பர் ஆகஸ்ட் 12ம் தேதி மருத்துவமனைக்கு இறந்தே கொண்டு வரப்பட்டார்.

இருவரது உடலும் ஞாயிறன்றுதான் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. உடல்கள் மருத்துவமனை மார்ச்சுவரியில் வைக்கப்பட்டது.

4 மணிக்கு சர்வடே உடலை வந்து எடுத்துக் கொள்கிறோம் என்று மருத்துவமனையில் இவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இதற்குள்ளாக தற்கொலை திகம்பர் குடும்பத்தினர் சர்வடேயின் உடலை திகம்பர் உடல் என்று அடையாளம் காட்டி போலீஸ் கையெழுத்துடன் உடலைப் பெற்றனர்.

சர்வடே குடும்பத்தினர் உடலை கொண்டு செல்ல வந்த போது தான் தவறு புரிந்தது. இது தெரிவதற்குள் திகம்பர் குடும்பத்தினர் சர்வதேயின் உடலுக்கு இறுதிச் சடங்கையும் நடத்தி விட்டனர்..

இதனையடுத்து சர்வடே குடும்பத்தினர் ஆத்திரமடைந்து ரகளையில் ஈடுபட்டனர், ஆனால் போலீஸ் தலையிட்டு சுமுகமாக முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்