வெடிகுண்டு மிரட்டல்: 3 விமானங்கள் அவசர தரையிறக்கம்

By பிடிஐ

டெல்லியிலிருந்து புறப்பட்ட 2 சர்வதேச விமானங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து அவை அவசரமாக தரையிறக்கப்பட்டன.

அதோடு பெங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தது. இதனால் இரு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தின் குர்கான் கால் சென்டருக்கு அதிகாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி மற்றும் பெங்களூருவில் இருந்து புறப்படும் 3 விமானங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அந்த மர்ம நபர் தெரிவித்தார்.

டெல்லி மற்றும் பெங்களூரு இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து செல்லும் ஏர் பிரான்ஸ், லுப்தான்சா உள்ளிட்ட 3 சர்வதேச விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இதனால் டெல்லி மற்றும் பெங்களூருவிலிருந்து புறப்படும் பல விமானங்கள் தாமதமாக கிளம்பின. இரவு நேர விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தொலைபேசி மிரட்டல் பெங்களூருவிலிருந்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

வணிகம்

48 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வணிகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்