இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 90,802 பேர் பாதிப்பு

By பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 90,802 ஆக அதிகரிக்க மொத்த பாதிப்பு எண்ணிககி 42 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்து 4 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துளது. பலி எண்ணிக்கை 71 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. காரணம் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1016 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா மரண விகிதம் 1.70% ஆகக் குறைந்துள்ளது.

நாட்டில் தற்போது 8 லட்சத்து 82 ஆயிரத்து 542 பேர் கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது மொத்த கரோனா தொற்று எண்ணிக்கையில் 20.99% ஆகும்.

ஒரே நாளில் 69,563 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32.50 லட்சத்தை தாண்டியுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்து 50 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 7,20,362 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4,95,51,507 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் 7ம் தேதியன்று 20 லட்சத்தைக் கடந்தது, ஆகஸ்ட் 23ம் தேதி 23 லட்சத்தைக் கடந்தது, செப்டம்பர் 5ம் தேதி 40 லட்சத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்