குலாம் நபி ஆசாத்துக்கு எதிராக சோனியாவுக்கு முன்னாள் நிர்வாகிகள் கடிதம்

By செய்திப்பிரிவு

காங்கிரஸுக்கு முழு நேரத் தலைவரை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், சமீபத்தில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது

இதனிடையே, உபி. காங்கிரஸில் பூசல் அதிகரித்துள்ளது. குலாம் நபி ஆசாத்தை நீக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து, கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.பி. சந்தோஷ் சிங் உட்பட 10 மூத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 10 பேரும் குலாம் நபி ஆசாத் மீது குறை கூறி சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், ‘‘கட்சிக்காக உழைத்தவர்கள் மீது திடீரென நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் அமைதியாக உள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை மாநில தலைமை நீக்க முடியாது. இந்த விஷயத்தில் சோனியா காந்தி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்