பெங்களூருவில் கனமழை சுவர் இடிந்து 5 பேர் பலி

By இரா.வினோத்

பெங்களூருவில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழைக்கு வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 5 கட்டிடத் தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.

பெங்களூரு ஹெக்டே நகர் அருகே 'சிக்னேச்சர் கன்ஸ்ட்ரக்சன்' என்ற கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறது. இதில் வேலை செய்யும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிப்பதற்காக கட்டிடத்தின் அருகே மண் சுவர், இரும்பு கூரையால் ஆன தற்காலிக வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்தது. அதிகாலை 4 மணி அளவில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், உறங்கிக் கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடு களுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந் தனர். காயமடைந்த 27 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவன உரிமையாளர், பொறியாளர், திட்டபொறியாளர், மேற்பார்வை பொறியாளர் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

39 mins ago

உலகம்

50 mins ago

உலகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்