இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை குறித்த புதிய நெறிமுறைகள் : மத்திய அரசு அறிவிப்பு 

By பிடிஐ

இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், பல்வேறு நகரங்களுக்கு உள்நாட்டு விமானத்தில் பயணிக்கும் முன் கரோனா பரிசோதனை குறித்த வாய்ப்புகளை மத்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுவரை சர்வதேச பயணிகள் விமான சேவை தொடங்கப்படவில்லை கரோனா வைரஸ் தாக்கம் குறையவில்லை என்பதால், இம்மாதம் 30-ம் தேதிவரை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இருப்பினும் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும், இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு அடிப்படையில் மட்டும் விமான சேவை அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வந்தே பாரத் மிஷன் மூலமும் இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் கரோனா பரிசோதனை குறித்து வாய்ப்புகளை மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் விமானநிலையத்திலிருந்து உள்நாட்டு விமானங்கள் மூலம் வேறு நகரங்களுக்கு செல்ல விரும்பினால், விமானநிலையத்திலேயே கரோனா பரிசோதனையான பிசிஆர் டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த முடிவுகள் வருவதற்கு 7 மணிநேரம் ஆகும். அதுவரை பயணிகள் விமாநிலையத்தில் காத்திருக்க வேண்டும்.

அந்த முடிவில் அவர்களுக்கு கரோனா இல்லை எனத் தெரியவந்தால், அவர்கள் உள்நாட்டு விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தனிமைப்படுத்தும் முகாம்களிலோ, ஹோட்டலிலோ தனிமைப்படுத்தத் தேவையில்லை. உள்நாட்டு விமானத்தில் அவர்கள் பயணிக்கலாம்.

ஒருவேளை அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்படும்.

சர்வதேச பயணி தான் புறப்படும் நாட்டிலிருந்து 96 மணிநேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து, அதில் நெகட்டிவ் எனும் சான்றிதழ் இன்றி புறப்பட்டு இந்தியாவுக்கு வந்திருந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் பணம் செலுத்தி ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதில் கரோனா பாதிப்பு இல்லாவிட்டால், வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 2-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சர்வதேச பயணிகள் இந்தியாவுக்கு புறப்படும் முன் 96 மணிநேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து, அதில் நெகட்டிவ் என சான்றிதழ் இருந்தால், அவர்கள் இந்தியாவில் தனிமைப்படுத்தும் முகாமிக்குச் செல்லத் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்