சரக்கு வாகனம் மீது லாரி மோதி 14 பேர் பலி

By இரா.வினோத்

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை அருகே பெல்காம் -ரெய்ச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 3 பெண்கள் உட்பட 14 பேர் பலியாகினர்.

கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை மாவட்டம் தொண்டன ஹட்டி, காசனகேரி, சாக்கோடி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர் கள் அருகில் உள்ள லோக்பூருக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். 20 பேர் வேலை முடிந்து நேற்றுமுன்தினம் இரவு சரக்கு வாகனத்தில் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பெல்காம் - ரெய்ச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டீசல் டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் மீது மோதியது.

இதில் சரக்கு வாகனத்தில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டேங்கர் லாரியில் இருந்த 2 பேர் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத் துக்கு வந்து, படுகாயமடைந்த வர்களை மீட்டு லோக்பூர் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக லோக்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுகாயமடைந்த 7 பேர் லோக்பூர் மற்றும் பாகல்கோட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். அவரையும் லாரி உரிமையாளரையும் தேடி வருகின்றனர்.

இந்த‌ விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் படுகாயமடைந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்