இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 லட்சமாக அதிகரிப்பு; ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று: 2 நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

By பிடிஐ

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 62 ஆயிரத்து 538 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்று எண்ணிக்கை 20 லட்சத்து 27 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் 19 லட்சத்தை கரோனா பாதிப்பு எண்ணிக்கை எட்டிய நிலையில் இன்று 20 லட்சத்தைத் தொட்டுள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக கரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 78 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 67.98 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்ட 110 நாட்கள் தேவைப்பட்டது. அதன்பின் 10 லட்சத்தை எட்ட 59 நாட்களும், அடுத்த 10 லட்சத்தை 21 நாட்களிலும் எட்டியுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸுக்குச் சிகிச்சை எடுத்துவருவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 384 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 886 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழப்பு 41 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 316 பேர் நேற்று உயிரிழந்தனர்.

அடுத்ததாக தமிழகத்தில் 110 பேர், கர்நாடகாவில் 93 பேர், ஆந்திராவில் 72 பேர், உத்தரப் பிரதேசத்தில் 61 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் 56 பேர், குஜராத்தில் 27 பேர், பஞ்சாப்பில் 26 பேர், மத்தியப் பிரதேசத்தில் 17 பேர், டெல்லியில் 15 பேர், ராஜஸ்தான், தெலங்கானாவில் தலா 12 பேர் பலியானார்கள்.

ஒடிசா, ஜம்மு காஷ்மீரில் 10 பேர், ஜார்க்கண்டில் 9 பேர், பிஹாரில் 8 பேர், திரிபுரா, புதுச்சேரியில் தலா 5 பேர், கேரளா, ஹரியாணாவில் தலா 3 பேர், கோவா, அந்தமான் நிகோபர் தீவுகளில் தலா 2 பேர், மணிப்பூரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி இதுவரை 2 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரத்து 393 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 6 லட்சத்து 39 ஆயிரத்து 42 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 316 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 792 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 612 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 110 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4,571 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 10 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,059 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 14 ஆயிரத்து 766 பேர் சிகிச்சையில் உள்ளனர். 27 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,583 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 75,076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 93 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2,897 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 12,019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்