இந்தியாவில் கரோனா பலி விகிதம்; 2.07 சதவிதமாக குறைந்தது

By செய்திப்பிரிவு

கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்போரின் விகிதம் தொடர்ந்து குறைந்து, 2.07 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 46ஆயிரத்து121 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 13 லட்சத்து 28 ஆயிரத்து 336 பேர் குணமடைந்துள்ளனர்.

குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குணமடைபவர்களின் எண்ணிக்கைக்கும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் உள்ள இடைவெளியும் அதிகரித்து வருகிறது. தற்போது இது 7 லட்சத்து 32 ஆயிரத்து 835.

குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. தற்போது, மிக அதிகபட்சமாக குணமடைபவர்களின் விகிதம் 67.62 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது 5 லட்சத்து 95 ஆயிரத்து 501 பேர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயால் பாதிக்கப்பட்டவர்களில் இது 30.31 சதவிகிதமாகும்.

இவர்கள் மருத்துவமனைகளில், அல்லது இல்லங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

24 ஜூலை 2020iல் சிகிச்சை பெறுவோர் விகிதம் 34.17 சதவிகிதம்.. இது இன்றைய நிலவரப்படி, 30.31 சதவிகிதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

‘முழுமையான அரசு அணுகுமுறை’யின் கீழ், பொதுத்துறை, தனியார்துறை அனைத்தும் மத்திய அரசின் தலைமையிலான உத்திகளின்படி கோவிட் நோயை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

பரிசோதனை மேற்கொள்ளுதல்; நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல்; சிகிச்சை அளித்தல் ஆகிய உத்திகளில் கவனம் செலுத்துதல்; மருத்துவமனைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பரிசோதனை வசதிகளை அதிகரித்தல், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள படி, தர நிபந்தனைகளுக்கு ஏற்ப சிகிச்சை அளித்தல், ஆகியவை கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைவதைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்துள்ளன.

இதனால், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மரணமடைவோர் விகிதம் உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவாக உள்ளது. தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றைய அறிக்கைகளின்படி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மரணமடைபவர்களின் விகிதம் 2.07 சதவிகிதமாக உள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 mins ago

ஜோதிடம்

25 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்