மாநிலங்களுக்கு 2-வது தவணை கோவிட் நிதி: ரூ.890.32 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி

By செய்திப்பிரிவு

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கோவிட்-19 அவசர கால உதவி மற்றும் சுகாதார நடைமுறை ஆயத்த நிலை தொகுப்புத் திட்டங்களுக்கான உதவியில், இரண்டாவது தவணையாக ரூ.890.32 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, மேற்குவங்கம், டாட்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இதன் மூலம் நிதி கிடைக்கும். இந்த மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பின் தீவிரத்துக்கு ஏற்ப நிதி உதவியின் அளவு அமைந்திருக்கும்.

கோவிட்-19 மேலாண்மை நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துச் செய்வதுடன், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதாரங்கள் அளித்து ஆதரவாகவும் இருந்து வருகிறது. இந்த `முழுமையான அரசு' அணுகுமுறை காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி, அவசர கால உதவி மற்றும் சுகாதார நடைமுறை ஆயத்தநிலை தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார்.

மருத்துவப் பரிசோதனைக்கான பொது சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துவதற்கு இந்த இரண்டாவது தவணை நிதி செலவிடப்படும். ஆர்.டி.-பி.சி.ஆர். சாதனங்கள் கொள்முதல் செய்தல் மற்றும் நிறுவுதல், ஆர்.என்.ஏ. பிரித்தெடுக்கும் உபகரணங்கள்,

TRUNAT & CBNAAT சாதனங்கள் மற்றும் BSL-II கேபினட்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதும் இதில் அடங்கும். பொது மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துவது, ஐ.சி.யூ. படுக்கை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், கிரையோஜினிக் ஆக்சிஜன் டேங்க்குகள் நிறுவுதல் மற்றும் மருத்துவ வாயுக் குழாய்கள் பொருத்துதல் ஆகியவையும், படுக்கையின் அருகில் வைக்கும் ஆக்சிஜன் சாதன வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

தேவையான அளவுக்கு அலுவலர்கள் நியமனம் செய்து, பயிற்சி அளித்தல், திறன் வளர்த்தல், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆஷா திட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோவிட் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதலும் இதில் அடங்கும். கோவிட் போராளிகள் முனையத்தில் பதிவு செய்து கொண்டுள்ள தன்னார்வலர்களையும், தேவையின் அடிப்படையில் கோவிட் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

2020 ஏப்ரலில் முதலாவது தவணையாக ரூ.3000 கோடி தொகை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனை வசதிகளை அதிகரித்தல், மருத்துவமனைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கண்காணிப்புச் செயல்பாடுகளை மேற்கொள்வது, அவசியமான சாதனங்கள், மருந்துகள் மற்றும் இதர பொருள்களை வாங்குவதற்காக அந்த நிதி அளிக்கப்பட்டது.

இந்தத் தொகுப்பு நிதியின் ஓர் அங்கமாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 5,80,342 தனிமைப்படுத்தல் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,36,068 படுக்கைகள், 31,255 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 86,88,357 பரிசோதனை உபகரணங்கள் மற்றும் 79,88,366 வி.டி.எம். சாதனங்களை வாங்கியுள்ளன. மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 96,557 மருத்துவ அலுவலர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு, 6,65,799 மணி நேர உழைப்புக்கான ஊக்கத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. 11,821 அலுவலர்களுக்கு பயண உதவிகளை வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

47 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்