சிவில் சர்வீஸ் தேர்வுகள் 2019 முடிவுகள் குறித்து யுபிஎஸ்சி விளக்கம்

By செய்திப்பிரிவு

2019 சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான, அரசின் காலிப்பணியிடப் பட்டியலுக்கு மாறாகப் பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாக தவறான செய்திகள் பரவியது பற்றி மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

சிவில் சர்வீஸ் தேர்வுகளின் கீழ், சேவைகள்/பணியிட ஆட்சேர்ப்புக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள தேர்வு விதிமுறைகளை ஆணையம் கடுமையாகப் பின்பற்றி வருகிறது. 927 காலிப் பணியிடங்களுக்கான, 2019 சிவில் சர்வீஸ் தேர்வுகளில், ஆணையம் முதல் கட்டமாக 829 தேர்வர்களின் முடிவுகளை வெளியிட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2019 சிவில் சர்வீஸ் தேர்வு விதிகள் எண் -16 (4) & (5)_க்கு இணங்க நிறுத்தி வைப்பு பட்டியல் பராமரிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது என்றும், இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பொதுப் பிரிவில் தேர்வாகி இருந்தால், அவர்களுக்குப் பயனளிக்கும் பட்சத்தில், அவர்கள் ஒதுக்கீட்டுப் பிரிவில் பணியை விரும்பினார்கள் என்றால், அதனால், ஏற்படும் காலி இடங்கள், நிறுத்தி வைப்புப் பட்டியலைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலில் தேர்வாகி, பதவிகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான போதிய தேர்வர்கள் இருப்புப் பட்டியலில் இருப்பார்கள். 2019 சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறை எண் 16 (5)_க்கு இணங்க, விருப்ப நடைமுறைகள் முடிவடையும் வரை, நிறுத்தி வைப்புப் பட்டியலை மிகவும் ரகசியமாகப் பராமரிக்க யுபிஎஸ்சி-க்கு அதிகாரம் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்