குழந்தைகளின் படிப்புக்காக தொலைக்காட்சி வாங்குவதற்கு தாலியை விற்ற கர்நாடக பெண்மணி

By செய்திப்பிரிவு

கர்நாடகாவைச் சேர்ந்த ஒருபெண், தனது குழந்தைகள்படிப்பதற்காக தொலைக்காட்சி வாங்குவதற்கு தனது தாலியை விற்றுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிப் பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமும் தொலைக்காட்சிகள் மூலமும் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் கர்நாட காவில் தொலைக்காட்சி மூலம் பள்ளிப் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் கடாக்மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரும் இவரதுகணவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுடைய இரண்டுபிள்ளைகள் பள்ளியில் படிக்கின்றனர். அந்தப் பிள்ளைகளிடம், தொலைக்காட்சிமூலம் பாடங்கள் நடத்தப்படும் என்றும் அதன் மூலம்வீட்டில் இருந்தபடியே வகுப்பில் கலந்து கொள்ளுமாறும் ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.

ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை

இதனால், ஏழ்மை நிலையில் இருக்கும் கஸ்தூரிதனது பிள்ளைகள் படிக்கதொலைக்காட்சி வாங்குவதற்காக தனது தாலியை ரூ.20 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.

இதுகுறித்து கஸ்தூரிகூறும்போது, ‘‘எனது பிள்ளைகள் படிப்பதற்காக தினமும்மற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்ப முடியாது. அவர்கள் படிக்க தொலைக்காட்சி அவசியம். கரோனா வைரஸ் காரணமாக எனக்கும் எனது கணவருக்கும் வேலை இல்லை. எங்களிடம் பணமும்இல்லை.

எனவே, தாலியை விற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ரூ.20 ஆயிரத்துக்கு தாலியை விற்றேன். அதில் ரூ.14 ஆயிரத்துக்கு தொலைக்காட்சி வாங்கினேன். இப்போது, எனது குழந்தைகள் எங்கள் வீட்டில் இருந்தபடியே படிக்கிறார்கள்’’ என்றார்.

கஸ்தூரியின் மகள் கூறும்போது, "எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. இப்போது படிப்பதற்காக எனதுதாயார் வாங்கிக் கொடுத்துள்ளார். நன்றாக படித்து பெரிய தாலியை எனது தாய்க்கு வாங்கித் தருவேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

19 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்