அனைத்து இந்தியர்களின் ஒப்புதலுடன் ராமர் கோயில் கட்டப்படுகிறது: கமல்நாத் 

By செய்திப்பிரிவு

அயோத்தியில் இந்தியர்கள் அனைவரின் ஒப்புதலுடனேயே ராமர் கோயில் கட்டப்படுகிறது என மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கு பெறுவர் என்று தெரிகிறது.
இந்தநிலையில் ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸும் வரவேற்றுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பதிவு செய்துள்ள வீடியோ செய்தியில் கூறுகையில் ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வரவேற்கிறேன். நாட்டு மக்களின் நீண்ட நாளைய விருப்பம் அது. அயோத்தியில் இந்தியர்கள் அனைவரின் ஒப்புதலுடனேயே ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்தியாவில் மட்டும் தான் இது சாத்தியமாகும். இந்தியர் ஒவ்வொருவரின் நம்பிக்கையின் மையப்புள்ளியாக ராமர் கருதப்படுகிறார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ராமர் கோயில் கட்டுவதை வரவேற்றுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங், ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விருபியதாகவும் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்