பிஎஸ்-4 ரக வாகனங்களின் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை

By செய்திப்பிரிவு

பி.எஸ்.4 ரக வாகனங்களின் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது, கடந்த மார்ச் மாதத்தில் அதிக அளவு பிஎஸ்.4 இஞ்சின் ரக வாகனம் விற்கப்பட்டுள்ளது, இதில் ஏதோ ஏமாற்று வேலை நடந்துள்ளது என நீதிபதி அருண் மிஸ்ரா அதிருப்தி தெரிவித்து மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பிஎஸ்-4 ரக வாகனங்களை 2020 ஏப்ரல்-1-ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யக்கூடாது என கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை கடந்த மார்ச் 27-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், பி.எஸ்-4 வாகனங்களை விற்க கூடுதலாக 30 நாட்கள் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில், பிஎஸ்-4 ரக வாகனங்களை விற்க கூடுதல் அவகாசம் வழங்கிய கட்டுப்பாடுடனான அனுமதியை வாகன விற்பனையாளர்கள் முறையாக பின்பற்றவில்லை. குறிப்பாக ஏற்கெனவே முன்பதிவு மற்றும் ஸ்டாக்கில் உள்ள 1.05 லட்சம் வாகனத்தை விற்கவும் , பதிவு செய்யவும் அனுமதி வழங்கியதை மீறி 2.55 லட்ச வாகனங்களை விற்கப்பட்டுள்ளது.

எனவே, கடந்த மார்ச் 27-க்கு பிறகு விற்பனை செய்யப்பட்ட பிஎஸ் -4 ரக வாகனங்களின் விவரத்தை தாக்கல் செய்ய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்துக்கும், அதேபோல், கடந்த மார்ச் 27-ம் தேதிக்கு பின்னர், பதிவு செய்யப்பட்ட BS-4 ரக வாகனங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்தனர்.

பின்னர் நீதிபதிகள், கடந்த மார்ச் மாதத்தில் அதிக அளவு பிஎஸ்.4 இஞ்சின் ரக வாகனம் விற்கப்பட்டுள்ளது. இதில் ஏதோ ஏமாற்று வேலை நடந்துள்ளதாக தோன்றுகிறது என அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, பி.எஸ்.4 ரக வாகனங்களின் பதிவுக்கு தடை விதித்ததோடு, மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

14 mins ago

க்ரைம்

49 mins ago

சுற்றுச்சூழல்

55 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்