ராமர் கோயில் கட்டத் தொடங்கிய பின் மீண்டும் வருவதாக 29 வருடங்களுக்கு முன் கூறிச்சென்ற மோடி: நினைவுகூறும் அயோத்திவாசிகள்

By ஆர்.ஷபிமுன்னா

ராமர் கோயில் கட்டத் தொடங்கிய பின் மீண்டும் வருவதாக, 29 வருடங்களுக்கு முன் அயோத்தி வந்த நரேந்திர மோடி கூறி இருந்துள்ளார். அதன்படி அவர் அடிக்கல்நாட்டு விழாவிற்கு வர இருப்பதாக உள்ளூர்வாசிகள் நினைவு கூறியுள்ளனர்.

அயோத்தியில் ராமஜென்மபூமி வளாகத்திற்கு அருகில் புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோ நடத்தி வருபவர் மகேந்திர திரிபாதி. இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு எடுத்த ஒரு படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் காணப்படுகிறார். அப்போது அயோத்தி வந்தவரை கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் இவர் குஜராத்தின் பாஜக தலைவர் என முரளி மனோகர் ஜோஷி அறிமுகப்படுத்தி உள்ளார்.

இது குறித்து மகேந்திர திரிபாதி கூறும்போது, ‘’நிலசர்ச்சையில் ராமஜென்ம பூமி சிக்கியிருந்த போது முரளி மனோகர் ஜோஷியுடன் ஏப்ரல் 1991 இல் மோடி வந்திருந்தார். அப்போது மோடியிடம் பத்திரிகையாளர்கள் மீண்டும் எப்போது வருவீர்கள் எனக் கேட்டனர்.

இதற்கு பதிலளித்தவர் தாம் ராமர் கோயில் கட்டத்துவங்கிய பின் மீண்டும் வருவதாகக் கூறிச்சென்றார். அதன்படி மீண்டும் வருபவர் நம் நாட்டின் பிரதமராகவும் பதவி அடைந்து விட்டார்.’’ எனத் தெரிவித்தார்.

பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்திற்கு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அயோத்தியில் புகைப்படம் எடுக்கும் பணியாற்றி வருகிறார். இவரது படங்களில் சில அயோத்தி வழக்கில் முக்கிய ஆதாரங்களாகவும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், தாம் ராமர் கோயில் அடிக்கல்நாட்டி விழாவிற்கு அழைக்கப்படவில்லை எனவும் வருந்துகிறார் மகேந்திர திரிபாதி. கரோனா பரவல் காரணமாக இவ்விழாவிற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் குறிப்பிட்ட 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

7 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்