கேரளா, உ.பி.யில் மாநிலங்களவை காலியிடங்களுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளாவில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவி 2 இடங்களுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிகள் தலா ஒன்று வீதம், இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. உத்தர பிரதேச எம்.பி. பென்னி பிரசாத் வர்மா மற்றும் கேரளாவில் எம்.பி. வீரேந்திர குமார் ஆகியோர் மறைவையடுத்து இந்த இடங்கள் காலியாகவுள்ளன.

இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல்களை நடத்துவதென தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிக்கை 2020 ஆகஸ்ட் 6-ந் தேதியன்று வெளியிடப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி – ஆகஸ்ட் 13 என்றும், மனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 17, தேர்தல் நாள் ஆகஸ்ட் 24 என்றும், வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 mins ago

இந்தியா

51 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்