ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்வது பதவிப் பிரமாண உறுதிமொழிக்கு எதிரானது: அசாசுதீன் ஓவைசி

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பிரதமராகக் கலந்து கொள்ளக் கூடாது, ஒரு தனிநபராக, தனிமனிதராகக் கலந்து கொள்ளலாம் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:

''மோடி பிரதமராகப் பதவியேற்றபோது நம் அரசியல் சாசனத்தின் அடிப்படையான மதச்சார்பின்மையைப் பாதுகாப்பேன் என்று பதவிப் பிரமாணத்தில் உறுதி மொழி ஏற்றார்.

எனவே, அயோத்தி நிகழ்ச்சியில் பிரதமராக அவர் கலந்து கொள்வது அவர் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது.

மாறாக அவர் ஒரு தனி மனிதராகக் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மதச் சுதந்திரம் உண்டு.

நான் பிரதமரிடம் கேட்பது என்னவெனில் இந்திய அரசுக்கு மதம் உள்ளதா என்பதையே. ஆனால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இதற்கு அழைக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது''.

இவ்வாறு ஓவைசி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

10 mins ago

வாழ்வியல்

29 mins ago

சுற்றுலா

32 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

57 mins ago

சினிமா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்