இந்தாண்டு ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் 21 கிலோ லட்டு ஏலம் ரத்து

By செய்திப்பிரிவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் ஆண்டுதோறும் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படும். 11-வது நாளில் விநாயகர் சிலை ஹுசைன் சாகர் ஏரியில் கரைப்பதற்காக 20 கி.மீ. தூரம் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். இந்த விநாயகருக்கு 21 கிலோ லட்டு பிரசாதம் படைக்கப்பட்டு 11-ம் நாள் காலை பூஜைக்கு பிறகு ஏலம் விடப்படும்.

இந்த பிரம்மாண்ட லட்டுவை வாங்குவோர் தங்கள் வாழ்வில் எல்லா வெற்றிகளையும் செல்வச் செழிப்பையும் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த லட்டு ரூ.17.60 லட்சத்துக்கு ஏலம் போனது.

இந்நிலையில் விழாக்குழு தலைவர் கல்லம் நிரஞ்சன் ரெட்டி கூறுகையில், “கரோனா பாதிப்பு காரணமாக பாரம்பரிய லட்டு பிரசாத ஏலத்தை கைவிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம். ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சிலை வைக்கும் நிகழ்ச்சி, 11-ம் நாள் பூஜையிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அரசின் வழிகாட்டு விதிகளை பின்பற்றி சிலை ஊர்வலம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்