கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: வெற்றிகரமாக நடைபெறுவதாக ஹரியாணா அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்படும் சோதனை ரோதக்கில் உள்ள ஹரியாணா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.

கிளினிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும் பரிசோதனையும் முடித்துள்ள நிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம், ஐசிஎம்ஆர் ஆகியவை அனுமதி வழங்கின.

இதேபோன்று காடில்லா ஹெல்த்கேர் நிறுவனம் ஒரு மருந்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த இரண்டு தடுப்பு மருந்துகளுமே முறையான ஆய்வுக்குட்படுத்தி விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்தவதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளன. மருத்துவ சோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உரிய அனுமதி வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. ஹரியாணா மாநிலம் ரோதக்கில் இந்த முயற்சி நடைபெறுகிறது.

இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் ‘‘பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்படும் சோதனை ரோதக்கில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் தொடங்கியது. 3 வகைகளில் செலுத்தி சோதிக்கப்படுகிறது. தடுப்பு மருந்த்தை அவர்கள் உடல் ஏற்றுக் கொண்டுள்ளது. எந்தவிதமான எதிர் விளைவுகளும் ஏற்படவில்லை.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்