விகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

விகாஸ் துபே என்கவுன்டர் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

கான்பூர் அருகில் உள்ள பிக்ருஎன்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீஸார் பிடிக்கச் சென்றனப். அப்போது, அவரது ஆட்களால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ரவுடி விகாஸ் துபே கும்பலைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது

இந்த வழக்கில் ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிகள் அக்னி ஹோத்ரி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே, விகாஸ் துபே உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், விகாஸ் துபேயின் முக்கிய உதவியாளர் அமர் துபே, பிரபாத் மிஸ்ரா ஆகியோரும் போலீஸார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே, மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

உ.பி. போலீஸார் விகாஸ் துபேயை விசாரணைக்காக கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது கடும்மழையால் துபே வந்த கார் கவிழ்ந்தபோது, அதிலிருந்து தப்பிக்க விகாஸ் துபே முயன்றார். அப்போது போலீஸார் சுட்டதிில் விகாஸ் துபே கொல்லப்பட்டார். கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் உள்பட 4 போலீஸார் காயமடைந்தனர்.

இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:
‘‘ஒரு சமூகவிரோத கும்பலை பிடிக்கச் சென்றபோது 8 போலீஸாரை சுட்டுக் கொன்ற சம்பவத்தை நாம் மன்னிக்க முடியாது. அந்த கும்பலுக்கு தண்டனை பெற்று தருவது நியாயமானதே. அந்த கும்பல் தலைவனை போலீஸார் என்கவுன்டர் செய்துள்ளனர். இந்தநேரத்தில் போலீஸாரின் செயல்பாடுகளை கேள்வி கேட்பது நியாயமல்ல. சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம், நீதி விசாரணை, ஊடக விவாதம் என எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இதனை வைத்து அரசியல் செய்யக்கூடாது. இது காவலர்களின் தைரியத்தை சீ்ர்குலைத்து விடும்’’ என கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்