கரோனா வைரஸ் தடுப்பு மருந்து விரைவில் விற்பனைக்கு வரும்: யோகா குரு பாபா ராம்தேவ் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று,உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆயுஷ் அமைச்சகத்துடன் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எங்களின் ஆயுர்வேத கரோனில்மருந்தை, கரோனா வைரஸ் நோய்க்கான மருந்தாக ஆயுஷ்அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக முறையான அறிவிப்பு வந்தவுடன் கடைகளில் கரோனில் மருந்து விற்பனைக்கு வரும்.

எங்களது பதஞ்சலி நிறுவனம் எந்தத் தவறும் செய்யவில்லை. அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி உள்ளது. சீந்தில், துளசி, அஷ்வகந்தா போன்ற ஆயுர்வேத மூலிகைகளின் சாறு மற்றும் கூட்டுப் பொருட்களை கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கரோனில் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மருந்து நாடு முழுவதும் கிடைக்கும். சில குழப்பங்களால் இம்மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சில மாநிலங்களுடன் நாங்கள் பேசி வருகிறோம்.

யோகாவும் ஆயுர்வேதமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்டைய கால சிகிச்சை முறைகளாகும். சுகாதாரம் மற்றும் மருத்துவத்தில் பதஞ்சலி யோகபீடத்தின் சாதனைகளை அலோபதி ஆதரவாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் சில பிரிவினர், மருந்து மாபியாமற்றும் பன்னாட்டு நிறுவனத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்கள் நான் சிறையில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இவ்வாறு யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்