பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் ஒய்வெஸ் லி டிரையனுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தியா சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சினை நீடிக்கும் நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரான்ஸ் வெளியுறவுத் துறை செயலாளருடன் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேற்று முன்தினம் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவு குறித்தும், கரோனா வைரஸின் தாக்கம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த சூழ்நிலையில், இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் நேற்று தொலைபேசி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் ஒய்வெஸ் லி டிரையனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. தற்கால பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் பேசினோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்ய பிரான்ஸ் ஒத்துழைப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்