இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 5.48 லட்சமாக அதிகரிப்பு: தொடர்ந்து 6-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேல் பாஸிட்டிவ்

By பிடிஐ


இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 19 ஆயிரத்து 459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 380 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கரோனாவால் இதுவரை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணி்கை 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆக அதிகரித்துள்ளது. இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 10 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 6-வது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது.கடந்த 1-ம் தேதி முதல் இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இரு பங்கு இந்த மாதத்தில் மட்டும் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆறுதல் அளிக்கும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 58.67 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரைக் காட்டிலும், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 7,429 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,623 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,808 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,079 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 639 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 557 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 660 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 399 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 247 ஆகவும், ஹரியாணாவில் 218 ஆகவும், ஆந்திராவில் 169 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 207 பேரும், பஞ்சாப்பில் 133 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 94 பேரும், பிஹாரில் 60 பேரும், ஒடிசாவில் 21 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரகாண்டில் 38 பேரும் , இமாச்சலப் பிரதேசத்தில் 9 பேரும், ஜார்க்கண்டில் 12 பேரும், அசாமில் 10 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 10 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 6,575 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,077 பேராக அதிகரித்துள்ளது. 52,607 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 275 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 45,537 ஆகவும் அதிகரித்துள்ளது.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 31,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,800 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 17,271 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 13,186 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 22,147 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 17,283 பேரும், ஆந்திராவில் 13,241 பேரும், பஞ்சாப்பில் 5,216 பேரும், தெலங்கானாவில் 14,419 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீரில் 7,093 பேர், கர்நாடகாவில் 13,190 பேர், ஹரியாணாவில் 13,829 பேர், பிஹாரில் 9,212 பேர், கேரளாவில் 4,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,152 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 6,350பேர், சண்டிகரில் 429 பேர், ஜார்க்கண்டில் 2,364 பேர், திரிபுராவில் 1,346 பேர், அசாமில் 7,206 பேர், உத்தரகாண்டில் 2,823 பேர், சத்தீஸ்கரில் 2,622பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 916 பேர், லடாக்கில் 963 பேர், நாகாலாந்தில் 415 பேர், மேகாலயாவில் 47 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 178 பேர், புதுச்சேரியில் 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 221 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 148 பேர், சிக்கிமில் 88 பேர், மணிப்பூரில் 1,185 பேர், கோவாவில் 1,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்