சீனாவை எதிர்கொள்ளும் திறன் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளது- கருத்துக் கணிப்பில் 72% பேர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

லடாக் எல்லைப் பிரச்சினையால் இந்தியா, சீனா இடையே போர்பதற்றம் நீடிக்கிறது. இதுதொடர்பாக சி-வோட்டர் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி மீது எந்த அளவுக்கு நம்பிக்கை உள்ளது என்று சி-வோட்டர் தரப்பில் மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் 72.6 சதவீதம் பேர்பிரதமர் மோடி மீது முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தனர். சீனாவை எதிர்கொள்ளும் திறன் அவருக்கு உள்ளது என்றுஅவர்கள் உறுதிபட கூறினர். 16.2 சதவீதம் பேர் பிரதமர் மோடி மீது ஓரளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் 11.2 சதவீதம் பேர் பிரதமர் மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தனர்.

கருத்துக் கணிப்பின்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83.7 சதவீதம் பேர் மத்திய அரசுக்குஆதரவு அளித்தனர். 45 வயதுமுதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 76.5 சதவீதம் பேர் மத்தியஅரசு மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தனர். 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களில் 72.1 சதவீதம் பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்களில் 72.1 சதவீதம் பேரும் மத்திய அரசை ஆதரித்தனர்.

வருவாய் குறைந்த மக்களில் 75.4 சதவீதம் பேர் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். நடுத்தர வர்க்க மக்களில் 72.6 சதவீதம் பேரும் உயர் வகுப்பு மக்களில் 70 சதவீதம் பேரும் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

ஒட்டுமொத்த அளவில் 16.7 சதவீதம் பேர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளித்தனர். 9.6 சதவீதம் பேர் ஆளும் கட்சியையும் ஆதரிக்கவில்லை, எதிர்க்கட்சிகளையும் நம்பவில்லை என்று பதில் அளித்தனர்.

இந்தியாவின் முதல் எதிரி நாடு எது என்று சி-வோட்டர் தரப்பில் மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் 68.3 சதவீதம் பேர், சீனா என்று பதில் அளித்தனர். 31.7 சதவீதம் பேர், பாகிஸ்தானே முதல் எதிரி நாடு என்று தெரிவித்தனர்.

சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று 68.2 சதவீதம் பேர்உறுதிபட தெரிவித்தனர். 31.8 சதவீதம் பேர் மட்டும் சீனப் பொருட்களை தொடர்ந்து வாங்குவோம் என்று கூறினர். தேசப் பாதுகாப்புவிவகாரங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பாக செயல்படுவாரா என்றுகருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டது. இதில் 61 சதவீதம் பேர் ராகுல் காந்தி மீது நம்பிக்கை இல்லை என்று பதில் அளித்தனர். 39 சதவீதம் பேர் மட்டும் ராகுலுக்கு ஆதரவு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்