இந்தியாவில் 24 மணிநேரத்தில் கரோனாவில் 11 ஆயிரம் பேர் பாதிப்பு; 10 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு; குணமடைந்தோர் சதவீதம் 51 ஆக உயர்வு 

By பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு வீரியமடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 325 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 797 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 51.07 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,950 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,477 ஆகவும், டெல்லியில் உயிரிழப்பு 1,327 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 459 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 475 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 292 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 185 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 399 ஆகவும், ஆந்திராவில் 84 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 86 பேரும், பஞ்சாப்பில் 67 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 59 பேரும், ஹரியாணாவில் 88 பேரும், பிஹாரில் 39 பேரும், ஒடிசாவில் 11 பேரும், கேரளாவில் 19 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 7 பேரும், ஜார்க்கண்டில் 8 பேரும், உத்தரகாண்டில் 24 பேரும், அசாமில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் இருவர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 50,978 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 24,547 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 41,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,823 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 23,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,325 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 12,694 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 10,802 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 13,615 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 11,087 பேரும், ஆந்திராவில் 6,163 பேரும், பஞ்சாப்பில் 3,140 பேரும், தெலங்கானாவில் 4,974 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5,041 பேர், கர்நாடகாவில் 7,000 பேர், ஹரியாணாவில் 7,208 பேர், பிஹாரில் 6,470 பேர், கேரளாவில் 2,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,102 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 3,909 பேர், சண்டிகரில் 352 பேர் , ஜார்க்கண்டில் 1,725 பேர், திரிபுராவில் 1,076 பேர், அசாமில் 4,049 பேர், உத்தரகாண்டில் 1,819 பேர், சத்தீஸ்கரில் 1,662 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 518 பேர், லடாக்கில் 549 பேர், நாகாலாந்தில் 168 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 91 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 112 பேர், சிக்கிமில் 68 பேர், மணிப்பூரில் 458 பேர், கோவாவில் 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

மேலும்