டெல்லியில் அதிகரிக்கும் கரோனா தொற்று; அமித் ஷாவுடன் கேஜ்ரிவால் ஆலோசனை

By செய்திப்பிரிவு

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் கரோனா வைரஸின் தாக்கம் 4-வது லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மே 28-ம் தேதியிலிருந்து கடந்த 4-ம் தேதி வரை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுவிட்டதால் மக்கள் எந்தவிதமான தடையும் இன்றி உலாவி வருகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களில் டெல்லியில் உயிரிழப்பு 700-க்கும் மேலாக அதிகரித்தது.

அதுமட்டுமல்லாமல் சமூகப் பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 11 நாட்களாக படிப்படியாக் குறைந்து 39 சதவீதத்துக்கும் கீழ் வந்துவிட்டது.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவலை எவ்வாறு சமாளிப்பது என்பதை ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க கடந்த மே 2-ம் தேதி 5 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழுவை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைத்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவனையின் முன்னாள் இயக்குநர் என்.கே.கங்குலி டெல்லியில் சமூகப்பரவல் தொடங்கிவிட்டதாக அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்திருந்தார்.

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினேன். டெல்லியில் கரோனா வைரஸ் தொற்று நிலவரம் தொடர்பாக விவாதித்தோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதி அளித்தார்.’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்