கர்நாடகாவில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடியூரப்பா கடிதம்

By இரா.வினோத்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள் ளது. அதனை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 4-ம் தேதி முதல் உரிய முன் னெச்சரிக்கை நடவடிக்கையுடன் ஊரடங்கு விதிமுறைகளை படிப் படியாக தளர்த்தி வருகிறோம்.

வரும் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் 4-ம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

4-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைவதால் மேலும் சில விதிமுறைகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக, கர்நாட காவில் உள்ள கோயில்கள், தேவா லயங்கள், மசூதிகள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என பல்வேறு தரப் பினரும் கோரிக்கை விடுத்துள்ள னர். எனவே, போதிய கட்டுப்பாடு களுடன் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்.

ஜூன் 1ம் தேதி முதல் மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அதே போல, வணிக வளாகங்கள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், சமூக நலக் கூடங்களை திறப்பது குறித்தும் ஆலோசனைகளை கேட்டுள் ளோம். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் உரிய அறிவிப்பு கள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

ஜோதிடம்

24 mins ago

வாழ்வியல்

29 mins ago

ஜோதிடம்

55 mins ago

க்ரைம்

45 mins ago

இந்தியா

59 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்