107 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: ராஜஸ்தான் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,952

By ஏஎன்ஐ

நாடு முழுதும் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

புதன் மதியம் 2 மணி நிலவரப்படி அங்கு புதிதாக 107 பேருக்கு கரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000-ஐ நெருங்கும் விதமாக 5,952 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த கரோனா தொற்றுக்களில் 3,373 பேர் குணமடைந்துள்ளனர். 2436 பேர் கரோனாவுக்காக இன்னமும் சிகிச்சையில் உள்ளனர். 143 பேர் கரோனா சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட மொத்த எண்ணிக்கை 1,06,750 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கரோனா பலி விகிதம் 3303 ஆக உள்ளது.

திரிபுராவில் மேலும் 4 பேருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானதையடுத்து அங்கு மொத்தம் 173 கரோனா கேஸ்கள் உள்ளன. இவர்கள் 4 பேரும் சென்னையிலிருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்