ஐந்து மீட்டர்கள் வரை எழும்பும் பேரலைகள்- வ.தேசத்தில் 2 கோடி பேர் வெளியேற்றம்- உம்பன் புயல் குறித்த 10 முக்கிய தகவல்கள்

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தை இன்று மாலைத் தாக்கவிருக்கும் சூப்பர் புயல் உம்பன் ஒடிசாவிலும் வங்காளத்தின் சில பகுதிகளிலும் கடும் சூறைக்காற்றையும் கனமழையையும் உருவாக்கியுள்ளது.

வடகிழக்கு கடலில் இது 2வது சூப்பர் புயலாகும், முதலில் 1999-ம் ஆண்டு ஒடிசாவில் சூப்பர் புயல் தாக்கியதை அடுத்து தற்போது இது சூப்பர் புயலாக உருவாகியுள்ளது.

உம்பன் புயல் தாக்கம் குறித்த 10 முக்கியமான தகவல்கள் இதோ:

1. மேற்கு வங்கத்தில் உம்பன் புயல் கரையைக் கடக்கும் போது தாக்கம் காரணமாக கடல் அலைகள் 4 முதல் 5 மீட்டர்கள் வரை உயரமாக எழும்பும் என்று வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹாபாத்திரா எச்சரித்துள்ளார்.

2. மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வங்கதேசத்தின் ஹதியா தீவு மற்றும் மேற்கு வங்கத்தின் திகா இடையே உம்பன் கரையைக் கடக்கிறது.

3.இந்தியக் கடற்கரையை உம்பன் கடக்கும் போது மணிக்கு சுமார் 185 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. சுமார் 5 லட்சம் பேர் இதனால் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற நிலையில் பெங்காலில் 3 லட்சம் பேர்களும், ஒடிசாவில் 1.3 லட்சம் மக்களும் பாதிப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வங்கதேசத்தில் சுமார் 2 கோடி பேர் பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

5. இந்தியக் கடற்படை வங்கக்கடலில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆந்திராவின் விசாகப்பட்டிணத்தில் கடற்படை கப்பல்கள் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

6.சுந்தரவனக்காடுகளுக்கு அருகில் புயல் கரையைக் கடக்கவுள்ளது, கரையைக் கடந்த பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி புயல் நகரும். கொல்கத்தாவின் கிழக்குப் பகுதிகளைக் கடந்து செல்லும்.

7. கரையைக் கடந்த பிறகு மேற்கு வங்கத்தின் மீது பல்வேறு தீவிரத்தன்மையுடன் இருக்கும், வியாழன் காலை வரை இது நீடிக்கும்.

8. கரையைக் கடக்கும் நிகழ்வு மதியம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. ஹவுரா-டெல்லி ஏ.சி ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

10. வங்கக்கடலின் மேற்பரப்பு வெப்ப நிலை கடுமையாக அதிகரித்ததனால் சூப்பர் புயல்கள் உருவாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

வணிகம்

12 mins ago

வாழ்வியல்

8 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

26 mins ago

விளையாட்டு

31 mins ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்