உள்நாட்டு விமான பயணம்: மே 4-ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு: ஏர் இந்தியா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

உள்நாட்டு விமான சேவைக்கு மே 4-ம் தேதி முதலும், வெளிநாட்டு விமான சேவைக்கு ஜுன் 1-ம் தேதி முதலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் கரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் உள்நாட்டு விமான சேவைக்கு மே 4-ம் தேதி முதலும், வெளிநாட்டு விமான சேவைக்கு ஜுன் 1-ம் தேதி முதலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா உட்பட அனைத்து விமானங்களும் தற்போது பயணிகள் சேவையை முழுமையாக நிறுத்தி வைத்துள்ளது. சரக்கு விமான போக்குவரத்து மட்டுமே தற்போது நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்