கரோனா ஊரடங்கு; ராஜஸ்தானில் இலவசமாக உணவுப் பொருள் விநியோகம்; புகைப்படம், வீடியோ எடுக்கத் தடை விதிப்பு

By ஆர்.ஷபிமுன்னா

ஊரடங்கு காலத்தில் உணவுப் பொருட்கள் விநியோகித்து படம், வீடியோ எடுப்பதற்கு ராஜஸ்தானில் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை காங்கிரஸ் ஆளும் மாநிலத்தின் முதல்வரான அசோக் கெலாட் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் தன் அறிக்கையில், ''ஊரடங்கில் அவதியுறுபவர்களில் பலரும் தங்கள் உணவிற்காக முழுமையாக அரசு மற்றும் இதர பொதுமக்களை நம்பியுள்ளனர். இதனால் அவர்களுக்கு உணவு மற்றும் அதற்கான பொருட்களை இலவசமாக அரசு அளிப்பதை படம், வீடியோ எடுக்கக் கூடாது.

இவற்றை செய்தி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு சிலர் அரசியல் செய்கின்றனர். இதை தடுப்பதற்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பொதுமக்கள் மற்றும் சமூக சேவை மையங்களும் படம், வீடியோ எடுப்பதைத் தவிர்க்கும்படியும் முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டார். அவர்களும் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

கரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் ராஜஸ்தான் மக்களுக்கும் பல்வேறு வகை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளம. இங்கு நேற்று இரவு வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 561 எனத் தெரிந்துள்ளது. இதில், 98 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஜெய்ப்பூரின் ராம்கன்ச் பகுதியில் அதிகம் பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்