கரோனா பாதிப்பு;  ஓமனில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை: மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் அல் சைத் உடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

கரோனா தொற்று சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் பொருளாதார சவால்கள் பற்றி இரு தலைவர்களும் பேசினர். இதைக் கட்டுப்படுத்த தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் கருத்துகள் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நெருக்கடியைக் கையாள்வதில் இரு நாடுகளும் சாத்தியமான வழிகளில் இருதரப்பு ஆதரவை பகிர்ந்து கொள்வதற்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இப்போதைய சூழ்நிலையில் ஓமனில் இருக்கும் இந்தியர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக பிரதமர் மோடியிடம் சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் கூறினார். இந்தியாவில் உள்ள ஓமன் குடிமக்களுக்கு சமீபத்தில் அளித்த உதவிக்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

முன்னாள் மன்னர் குவாபூஸ் மறைவுக்கு பிரதமர் மோடி மீண்டும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியாவின் இரண்டாம் நிலை நட்பு நாடுகளில் மிக முக்கிய நாடாக ஓமன் இருப்பதாகவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்