உலக அளவில் கரோனா வைரஸ் தடுப்பு:  ட்ரம்புடன் பிரதமர் மோடி ஆலோசனை

By செய்திப்பிரிவு

உலக அளவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என
பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே கரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் கரோனா வைரஸுக்கு ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருநாடுகளும் இணைந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இருவரும் பேசினர்.

பின்னர் இதுபற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பை ஒழிக்க இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக அதிபர் ட்ரம்புடன் நீண்டநேரம் ஆலோசித்தேன். இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைக்கு அமெரிக்க தரப்பில் முழு ஆதரவு அளிப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

க்ரைம்

11 mins ago

இந்தியா

25 mins ago

சுற்றுலா

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்