கரோனா நிதி; துணை ராணுவ படை சார்பில் ரூ. 116 கோடி: அமித் ஷாவிடம் வழங்கினர்

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று துணை ராணுவப்படையினர் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை கரோனா நிதிக்கு வழங்கியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.


இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று துணை ராணுவப்படையினர் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை கரோனா நிதிக்கு வழங்கியுள்ளனர்.


இதன்படி மொத்தம் 116 கோடி ரூபாய் நிதியை துணை ராணுவத்தின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட அமித் ஷா துணை ராணுவப்படையினக்கு நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்