பாஜகவுக்கு எதிராக பிஹாரில் மெகா கூட்டணி: லாலு - நிதிஷ் கட்சிகள் தொகுதிப் பங்கீடு

By ஐஏஎன்எஸ், பிடிஐ

பிஹாரில் எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அணிக்கு எதிராக, ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.

இதில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் தலா 100 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் எஞ்சிய 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரும், லாலுவும் நேற்று பாட்னாவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை நிதிஷ்குமார் வெளியிட்டார். மெகா கூட்டணி சார்பில் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் நிதிஷ்குமார் கூறினார்.

நிதிஷ்குமாரும், லாலுவும் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, “பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட் டணியை ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங் கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி தோற்கடிப்பது உறுதி. கூட்டணித் தலைவர்கள் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்” என்றனர்.

லாலு கூறும்போது, “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை வீழ்த்தவே நாங்கள் ஓரணியில் திரண்டுள்ளோம். நிதிஷ்குமாரின் மரபணுவில் கோளாறு உள்ளது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரிய பதிலடி கொடுப்போம்” என்றார்.

243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் - நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

54 mins ago

விளையாட்டு

11 mins ago

இந்தியா

10 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

22 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

29 mins ago

சுற்றுச்சூழல்

57 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்