‘‘இயலாமையை இல்லாமல் ஆக்கும் போர்’’ - பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்த மாளவிகா ஐயர்

By செய்திப்பிரிவு

குண்டு வெடிப்பில் தனது கைகளை இழந்து, இன்று உலக அளவில் புகழ்பெற்றுள்ள மாளவிகா ஐயர் பிரதமரின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார்.

பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை விடுத்த அறிவிப்பின்படி," தனது சமூகவலைத்தள கணக்கை மக்களை ஈர்த்த 7 பெண்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். இவர்களின் அனுபவங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்" எனத் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இன்று தனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றை 7 சாதனைப் பெண்களிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து மகளிர் தினத்துக்குத் தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி, " நான் ஏற்கனவே கூறியதுபோல், நான் சமூக வலைத்திலிருந்து இருந்து வெளியேறிவிட்டேன். இன்றைய நாள் முழுவதும், 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்த தகவல்களை என்னுடைய சமூக வலைத்தளம் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள், உரையாடுவார்கள்.

இந்தியாவில் பல்வேறு சாதனைகளைச் செய்த பெண்கள் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள். இந்த 7 பெண்களும் பல்வேறு பிரிவுகளில் மிகச்சிறந்த செயல்களைச்ச செய்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள், ஆசைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். தொடர்ந்து மகளிர் தினத்தை இன்று கொண்டாடுவோம், சாதனைப் பெண்களிடம் இருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த பெண்களும் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

குண்டு வெடிப்பில் தனது கைகளை இழந்து, இன்று உலக அளவில் புகழ்பெற்றுள்ள மாளவிகா ஐயர் பிரதமரின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார்.

பிரதமர் மோடியிடன் ட்விட்டர் பக்தகதில் மாளவிகா ஐயர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘இயலாமையை இல்லாமல் ஆக்கும் போரில் மனோபாவம் பாதி பங்கு வகிக்கிறது. இதனால் தான் மகளிர் தினமான இன்று எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார். மாற்று திறனாளிகள் குறித்த இந்தியாவின் நீண்டகால மூட நம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்து சரியான பாதையில் இந்தியா பயணிப்பதாக நம்புகிறேன்’’ எனக் கூறிள்ளார்.

13 வயதில் சிறுமியாக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த மாளவிகா, வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி தன் இரண்டு கைகளையும் இழந்தவர். கால்களிலும் பெரும் காயம் ஏற்பட்டது. ஒன்றரை வருடங்கள் முழு ஓய்வில் இருந்தார். நடக்க முடியாத நிலைமை. மீண்டும் நடக்க வேண்டும் என நினைத்தார் மாளவிகா. செயற்கை கைகளை பொருத்திக் கொண்டார்.

இப்போது மாளவிகா பிஎச்டி முடித்திருக்கிறார். வளர்ந்து வரும் உலக தலைவர்கள் எனும் விருதை நியூயார்க்கில் பெற்றார் மாளவிகா. இந்த விருதை பெறும் முதல் பெண் என்ற பெருமையும் மாளவிகாவையே சாரும். கடந்தாண்டு டெல்லியில் ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றினார் மாளவிகா.

பெண்களுக்காக சிறந்த சேவை ஆற்றியதற்காக மால்விகா ஐயர் கடந்த 2018-ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான நாரி சக்தி புரஷ்கார் விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்