காங்கிரஸ் எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய மத்திய அரசு தயார்: அமைச்சர் வெங்கய்ய நாயுடு அறிவிப்பு

By ஐஏஎன்எஸ்

மக்களவையிலிருந்து காங்கிரஸ் எம்பிக்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்வது தொடர்பாக தீர்மானம் தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்று நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு மக்களவை யில் நேற்று தெரிவித்தார்.

எம்பிக்களின் இடை நீக்கத்தை ரத்து செய்ய கோரி மக்களவையில் இடதுசாரி, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். அப்போது வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

இடைநீக்கத்தை ரத்து செய்ய அரசு தயாராக உள்ளது. ஆனால் காங்கிரஸ் எம்பிக்கள் மக்க ளவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை சந்தித்து அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பதாக உறுதி அளிக்கவேண்டும்.

எம்பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்து அவை புறக்கணிப்பு செய்து நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸுடன் இணைந்து போராடிய சமாஜ்வாதி யும் இடதுசாரிகளும் அவைக்கு வந்தது மகிழ்ச்சி தருகிறது.

அவையை சுமுகமாக நடத்து வதற்கு காங்கிரஸ் உதவினால் அவர்களை திரும்ப அழைக்க உத்தரவாதம் தருகிறேன் என்றார்.

இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பி. கருணாகரனை நோக்கி பேசிய அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், ‘கூச்சல் போடு வதும், கோஷம் எழுப்புவதும் சரி யான செயல் அல்ல. பூஜ்ய நேரத் தில் இந்த பிரச்சினை பற்றி விவா திக்கலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்