371-வது பிரிவு எந்த காலத்திலும் நீக்கப்படாது: அமித் ஷா உறுதி

By செய்திப்பிரிவு

வடகிழக்கு மாநிலங்களின் உரிமையை பாதுகாக்கும் 371-வது பிரிவை எந்த காலத்திலும் நீக்க மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிலம் உதயமான 34-வது ஆண்டு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டபோது 371-வது பிரிவும் நீக்கப்படும் என எதிர்க்கட்சிகள் வதந்தியை கிளப்பி விட்டன. அதில் துளியும் உண்மையில்லை.

அருணாச்சல பிரதேசம் மற்றும் மிஸோரம் மாநிலங்கள் பிறந்த தினமான இன்று அந்த மாநில மக்களுக்கு ஒரு உறுதி மொழியை அளிக்கிறோம். 371-வது பிரிவை எந்த காலத்திலும் நீக்க மாட்டோம். யாரும் அதுபோன்ற முடிவெடுக்க அனுமதிக்க மாட்டோம்.

வடகிழக்கு மாநிலங்களின் நலனில் பிரதமர் மோடி முழு அக்கறை கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்கள் புவியியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மட்டுமே இந்தியாவுடன் இணைந்து இருந்தது. பிரதமர் பதவியை மோடி ஏற்ற பிறகே வடகிழக்கு மாநிலங்கள் இந்திய ஆன்மாவுடன் இணைந்துள்ளது.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

37 mins ago

விளையாட்டு

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்