இடஒதுக்கீடு விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்

By செய்திப்பிரிவு

அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இடஒதுக்கீட்டை பாதுக்காக்க சட்டம் இயற்றக்கோரி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது.

உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் சில அரசுப் பணியிடங்களை நிரப்ப எஸ்சி,எஸ்டி இட ஒதுக்கீடு இல்லாமல் அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அந்த அறிவிப்பை ரத்து செய்து இட ஒதுக்கீட்டுடன் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.ஸி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோருவதற்கு எந்த தனிநபருக்கும் அடிப்படை உரிமை இல்லை. இட ஒதுக்கீடு வழங்கிடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கினர். இந்த உத்தரவு நாடுமுழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இடஒதுக்கீட்டை பாதுக்காக்க சட்டம் இயற்றக்கோரி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்