வெற்றிக்குப் பிறகு 24 மணி நேரத்தில் 11 லட்சம் பேர் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்: ஆம் ஆத்மி கட்சி தகவல்

By பிடிஐ

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், நாடு முழுதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆம் ஆத்மியில் இணைந்ததாக அந்தக் கட்சியும், அரவிந்த் கேஜ்ரிவாலும் தெரிவித்தனர்.

பாஜக பாணியில் மிஸ்டு கால் உத்தியை ஆம் ஆத்மி கடைப்பிடித்துள்ளது. கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் நாடு முழுதும் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர், சுமார் 11 லட்சம் பேர், வெற்றிக்குப் பிறகு ஆம் ஆத்மியில் இணைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

70 இடங்களில் ஆம் ஆத்மி 62 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தது. மோடி முதல் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஹை வோல்டேஜ் பிரச்சாரகர்கள் வந்தும் ஆம் ஆத்மி கோட்டையை பாஜகவினால் சரிக்க முடியவில்லை. பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்தன, காங்கிரஸ் சுத்தமாக ஒதுக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்