அதிகம் பேசப்படும் பக்கங்கள் பட்டியல்: பேஸ்புக்கில் இந்திய ராணுவம் மீண்டும் முதலிடம்

By பிடிஐ

சமூக இணையதளமான பேஸ்புக்கில் அதிகப்படியானவர்களால் பேசப்பட்ட பிரபலமான பக்கங்கள் பட்டியலில் இந்திய ராணுவம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் அமெரிக்காவின் சிஐஏ, எப்பிஐ, நாசா ஆகியவையும் பின்தங்கி உள்ளன.

இதுகுறித்து ராணுவ வட்டாரத்தில் கூறும்போது, “பேஸ்புக்கில் அதிகம் பேரால் பேசப்படும் பக்கங்கள் பட்டியலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்தோம். இப்போது 2-வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளோம். இதன்மூலம் எங்கள் பக்கத்துக்கு கிடைத்த ‘லைக்’குகள் உண்மை தான் என்பது நிரூபணமாகி உள்ளது” என்றனர்.

பேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள பக்கங்களில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தைப் பற்றி கருத்து பரிமாறிக் கொண்டவர்கள் எண்ணிக்கையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அதிகப்படியானவர்களால் பேசப்பட்ட (பீப்புள் டாக்கிங் அபவுட்) பக்கங்கள் பட்டியல் தர வரிசைப்படுத்தப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் அதிகப்படியானவர்களால் பேசப்படுவது மட்டுமல்லாமல், அதன் இணையதளத்தை வாரம் தோறும் 25 லட்சம் பேர் பார்ப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 2013, ஜூன் 1-ம் தேதி பேஸ்புக்கில் இணைந்த இந்திய ராணுவத்தின் பக்கத்துக்கு இது வரை 29 லட்சம் பேர் லைக் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கிலும் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நடைபெறுகிறது. இந்தியாவில் பாகிஸ்தான் ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதுபோல் பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தை 4.47 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்திய ராணுவத்தின் திட்டங்களை பிரபலப்படுத்துவதில் சமூக இணைய தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்திய ராணுவத்தின் பேஸ்புக் பக்கத்துக்கான இணைப்பு - >https://www.facebook.com/Indianarmy.adgpi?fref=ts

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

சுற்றுச்சூழல்

27 mins ago

தமிழகம்

58 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்