டெல்லி மக்கள் புதிய அரசியலை உருவாக்கி இருக்கிறார்கள்: கேஜ்ரிவால் பெருமிதம்

By செய்திப்பிரிவு

டெல்லி மக்கள் புதிய ஒரு அரசியலை உருவாக்கி இருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்து முடிந்தது. பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக 7
தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில் கட்சித் தொண்டர்களிடையே கேஜ்ரிவால் பேசினார்.

அவர் கூறியதாவது:

‘‘டெல்லி மக்கள் புதிய ஒரு அரசியலை உருவாக்கி இருக்கிறார்கள். நாட்டின் தலைநகரில் எங்கள் பணி வெற்றியைக் கொடுத்துள்ளது. டெல்லியில் கல்வி, மின்சாரம், மருத்துவ வசதி போன்றவற்றை வழங்கியவர்களுக்கே மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

இது மக்களின் வெற்றி. இன்று செவ்வாய்க்கிழமை. இது ஹனுமனின் தினம். இந்த தினத்தில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. எங்களுக்கு வெற்றியை வாரி வழங்கிய ஹனுமனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியை மேலும் சிறந்த நகரமாக மாற்றுவேன். இன்று எனது மனைவியின் பிறந்த தினம். கேக் வெட்டிக் கொண்டாடினோம்.

டெல்லி மக்களுக்கு கேக் வழங்க விரும்புகிறேன். பாரத் மாதா கி ஜெய், இன்குலாப் ஜிந்தாபாத்''.

இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

35 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்