எதிர்ப்புக் குரலை அடக்குவதுதான் ஜனநாயக தரவரிசையில் வீழ்ச்சிக்கு காரணம்: சிவசேனா சாடல்

By பிடிஐ

நாட்டில் மக்களின் எதிர்ப்புக் குரலை அடக்குவதும், நசுக்குவதுதான் 2019-ம் ஆண்டு ஜனநாயகத்துக்கான உலகத் தரவரிசையில் இந்தியா வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கியக் காரணம் என்று மத்திய அரசு சிவசேனா கட்சி கடுமையாகச் சாடியுள்ளது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது, குடியுரிமைத் திருத்தச்சட்டம் கொண்டு வந்தது, என்ஆர்சி, என்பிஆர் நடவடிக்கைகளை நாடுமுழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டு இருப்பது ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் கடந்த ஓர் ஆண்டாக நடந்து வருகின்றன. இந்த போராட்டங்கள் ஜனநாயக ரீதியாக நடந்தபோதிலும் இவற்றை அடக்கும் முயற்சியில் மத்திய அரசு நடந்து கொண்டது.

இதனால், தி எக்னாமிக் இன்டலிஜென்ஸ் யூனிட் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் " இந்தியாவின் ஜனநாயகத்துக்கான தரவரிசை குறியீடு 41-வதுஇடத்திலிருந்து 51-வது இடத்துக்குச் சரிந்துள்ளதாகத் தெரிவித்தது. அதற்கு முக்கியக் காரணமாக மக்கள் நடத்தும் போராட்டங்களை, உரிமைகளைப் பறிப்பதுதான் என தெரிவித்திருந்தது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் மத்திய அரசைச் சாடி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் நிலவும் பொருளாதார வளர்ச்சிக் குறைவு அமைதியற்ற சூழலையும், நிலையற்றதன்மையையும் உருவாக்கியுள்ளது. இதன் விளைவுகள்தான் நாட்டில் தற்போது எதிரொலிக்கிறது.
பொருளாதார வளர்ச்சியில் மட்டும் நாட்டுக்கு பின்னடைவு ஏற்படாமல், ஜனநாயகத்துக்கான தரவரிசையிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச்சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் அடக்கும் விதத்திலும், நசுக்கும் விதத்திலும் அரசு செயல்படுகிறது.

ஜேஎன்யு மாணவர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டபோது, மாணவர்களுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தவர்கள் மீதுகூட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களும் குற்றவாளிகள்போல் சித்தரிக்கப்பட்டார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் ஜனநாயகத்துக்கான குறியீடு வரிசையில் இந்தியா 51-வது இடத்துக்குச் சரிந்து செல்லக் காரணமாகும். ஆனால் நாட்டில் நிலவும் சூழலை மத்தியில் ஆளும்கட்சியும், அதன் ஆதரவாளர்களும் புரிந்து கொண்டால் அது வியப்புக்குரியதுதான்.

பொருளாதார புலனாய்வு அமைப்பின் அறிக்கையை மத்திய அரசு புறந்தள்ளினால்கூட, பொருளாதாரத்தில் ஏன் சரிவு ஏற்பட்டது என்ற காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை பொருளாதாரத்தில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்ற கூற்றை மத்திய அரசு முன்வைத்தால், எதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெறுகிறீர்கள். கடந்த ஆண்டு ரிசரவ் வங்கியிடம் இருந்து ரூ.1.76 லட்சம் கோடி எதற்காகப் பெற்றீர்கள்?

இந்தியாவை 5லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு பாராட்டுக்குரியது. ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக வைத்திருந்தால் எவ்வாறு அடைய முடியும்
இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்