குடியுரிமை சட்டத்தை மக்கள் ஆதரிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை

By செய்திப்பிரிவு

வைசாலி: குடியுரிமை சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவாக பிஹார் மாநிலம் வைசாலி அருகே பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது:

சிஏஏ விவகாரத்தில் சிறுபான்மையினரை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி வருகின்றன. வன்முறையை தூண்டி வருகின்றன. எவருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக சிஏஏ கொண்டுவரப்படவில்லை. 370-வது பிரிவு ரத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, சிஏஏ போன்ற நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையின் கீழ் பிஹாரில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம். எங்கள் கூட்டணி முடிவுக்கு வரும் என்று ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் லாலு பிரசாத் கனவு காண்கிறார். அவரது கனது பலிக்காது. நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடும் நிதிஷ் குமார் தலைமையில் இந்த மாநிலமும் வளர்ச்சி பெறும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்