கைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் டிஎஸ்பி தேவிந்தர் சிங் பதக்கம் பறிப்பு: அரசு அதிரடி உத்தரவு

By செய்திப்பிரிவு

பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரிலிருந்து தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் டிஎஸ்பிக்கு அரசால் அளிக்கப்பட்ட 2018-ம் ஆண்டின் உயரிய விருதுக்கான பதக்கத்தை பறிமுதல் செய்ய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இவரது செய்கை விசுவாசமின்மையையும் படையினருக்கு இழிவையையும் தேடித்தந்துள்ளது. சனிக்கிழமையன்று குல்காம் மாவட்டத்தில் டிஎஸ்பி தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். இவருடன் ஹிஜ்புல் முஜாஹிதின் தீவிரவாதிகளான நவீத் பாபா, அல்டாஃப் ஆகியோர் உடனிருந்தனர். இவர்க்ளோடு பயங்கரவாத அமைப்பின் வழக்கறிஞராக செயல்பட்டு வந்த வழக்கறிஞரும் இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட உயரிய போலீஸ் விருதுக்கான பதக்கத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தேவிந்தர் சிங் வீட்டில் போலீசார் தேடுடல் வேட்டை நடத்தினர். இங்குதான் தடைசெய்யப்பட்ட ஹிஜ்புல் தீவிரவாதியை அவர் அடைக்கலமாக பாதுகாத்து வந்தார்.

இவரது இல்லத்திலிருந்து 2 பிஸ்டல்கள், பெரிய அளவிலான ஆயுதங்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 secs ago

தமிழகம்

21 mins ago

சினிமா

17 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

41 mins ago

க்ரைம்

47 mins ago

க்ரைம்

56 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்